Welcome

to our home

Serene Rose @ Sulur

About Us,
History & Origin
and More...

Serene Rose is a senior living community located 24 kms away from the Coimbatore airport, this community has a breathtaking view of the Western Ghats. Spread across 5.76 acres, Serene Rose comes with 88 living spaces and 2,636 sq. m of open space. Here, embrace the cool breeze with a vibrant and warm lifestyle.

Facilities
Well Being

Medical Centre with Ambulance, Resident Doctor and Nursing facility, Activity Centre, Gymnasium, STP / RO plant.

Amenitites

Temple, Multi Purpose Hall, Catering Services, House Keeping Services, Deep Cleaning, Garbage Collection Services.

Entertainment

Club House with Lounge, Dining Room, Reading / Card Room, Library, TV Room, Indoor Games, Kitchen, Pantry etc.

Security

Gated Community with 24X7 Security Service, Resident Manager, Stand-by Generator for Common Spaces and Homes, Street Lights.

Accessibility

Elevators, Paved Roads, Intercom, Fiber to Home, Cable TV, Golf Cart for Internal Movement, Wheel Chair Access to Common Spaces.

Environment

Avenue Trees, Well Mainted Gardens, Rain Water Harvesting, Sewage Treatment Plant, Storm Water Drains.

Recent Posts

Story Time - பேட்டும் பாலும்

 பேட்டும் பாலும்

திரு. நாராயணமூர்த்தி

Image Source : DNA

அப்பொழுதெல்லாம் கோபி வைரவிழா உயர் நிலைப் பள்ளியில் ஆண்டு இறுதியில் உடைந்த விளையாட்டுப் பொருள்களை ஏலம் விடுவார்கள். ஒண்ணார்ரூபா கொடுத்து கைப்பிடி உடைந்துபோன கிரிக்கெட் பேட் ஒன்றை எங்கள் டீமுக்காக வாங்கினோம்.

அதை எடுத்துக்கொண்டு கட்டைமாட்டு வண்டி தயாரிக்கும் ஆசாரி ஒருவரிடம் கெஞ்சி மூங்கில் ஒன்றை V வடிவத்தில் சீவி அதை அந்த பேட்டுக்குள் பசை போட்டு சொருகி ஆடாமல் இருக்க சுள்ளாணிகளை அடித்து ஒரு முழு பேட் செய்தோம். 

அதற்கு மேல் ட்வைன் நூலை உருகிய வஜ்ஜிரத்தில் நனைத்து நெருக்கி நெருக்கிச் சுற்றினோம். சூட்டுடன் சுற்றச் சுற்ற கைகளில் கொப்புளங்கள் வந்தாலும், வஜ்ஜிர நாற்றம்  மூக்கைத் துளைத்தாலும் பொருட்படுத்தாமல் எடுத்துக் கொண்ட காரியத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு மூன்று நான்கு அடுக்குகள் மேலே மேலே சுற்றி உறுதி ஏற்றினோம். மூன்று நாட்கள் அதையே பார்த்துக் கொண்டு வந்தோம். பசையை நன்கு காயவிட்டோம்.

பேட் இப்போது ரெடி. கிரௌண்டில் மிகவும் சந்தோஷமாகவும், பெருமிதத்துடன் கார்க் பாலை முதலில் வேகமாக அடித்தவுடன் முழங்கை மற்றும் தோள்களில் விர்ரென்று ஷாக் அடித்தது. நிஜமான பேட்டில் கைப்பிடி அதிர்ச்சி தாங்கும் வகையில் ஏழெட்டு மரச்சிறாய்கள் ஆலையில் பசை போட்டு ஒட்டப்பட்டு, அதன் மேல் ரப்பர் உறை போட்டு வருவதால் அதற்கு லேசாக வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும். பந்தை எவ்வளவு வேகமாக அடித்தாலும் ஷாக் வராது. மொத்தையான நம்ம ஊர் மூங்கிலுக்கு அப்படியான நாசூக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. சபை கூடி இந்த பிரச்சினைக்குத் தீர்வு ஆலோசித்தோம். சைக்கிள் கடை அண்ணனிடம் குழாயடித்து ஒரு பழைய சைக்கிள் டியூப் வாங்கி அதனை அந்த மூங்கில் கைப்பிடியில் செருகினோம். நிஜ பேட் போலவே ஒரு தோற்றம் வந்தது.

மறுநாள் அதை விளையாடக் கொண்டு போனோம். நல்ல ஃபுல் டாஸ் பந்து வந்தது. ஓங்கி அடித்தேன். பந்தை முந்திக் கொண்டு பேட் என் கையை விட்டுப் பறந்து கொண்டிருந்தது. என் கையில் சைக்கிள் டியூப் மட்டும் இருக்கிறது. இதென்னடா புது சிக்கல். மூங்கில் மிகவும் வழுவழுப்பாக இருந்ததால் அது டியூபில் இருந்து வழுக்கிக்கொண்டு பறந்து விட்டது. மறுநாள் மூங்கிலுக்கும் வஜ்ஜிர நூல் சுற்றி க்ரிப் ஏற்படுத்தி அதன் மேல் சைக்கிள் டியூபை மீண்டும் செருகி ஒரு வழியாக பேட்டை உருவாக்கினோம். ஷாக் மிகுதியாக இருந்தாலும் நாங்கள் எங்களை அதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டோம். பந்தின் கதை இதைவிட இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

கிரிக்கெட் பந்து எப்பொழுதும் எங்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். கார்க் பால் அதற்கு ஒரு டூப்ளிகேட். கனமாகவும் இருக்கும்; கொஞ்சம் உழைக்கவும் செய்யும். நன்றாக ஸ்பின் ஆகும். காலில், கையில் பட்டால் பந்தை விட வீக்கம் பெரியதாக இருக்கும். ஆனால் அது ஈரோட்டில்தான் கிடைக்கும். பஸ் செலவு பந்தின் விலையை விட இரண்டு மடங்கு அதிகம். 

பேட்டை ஏலத்தில் எடுத்ததால் ஒரு கிழிந்த கிரிக்கெட் பந்து இனாமாகக் கிடைத்தது. அதை செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் தந்து சுற்றித் தைக்கச் சொன்னோம். இருந்தாலும் அது அல்பாயுசில் முடிந்தது.

நான்தான் அந்தக் காலத்தில் அப்துல்கலாம். இத்துப் போன கிரிக்கெட் பந்தின் உட்புறம் ஆராய்ச்சி செய்ததில் அது ஒரு கடினமான பொருள் மீது சுற்றப்பட்ட சணல் நூல் உருண்டை என்பது தெரிய வந்தது.

ஒரு சிறிய சிவப்புக் கல்லை நல்ல பழைய துணியால் சுற்றி ஒரு சிறிய உருண்டையை உருவாக்கினேன். பேட்டுக்கு வாங்கியிருந்த சைக்கிள் டியூபில் மிச்சம் ஒரு மீட்டர் அளவு இருந்தது. அதை பிளேடால் (கத்தரிக்கோல் எங்களிடம் இல்லை)  வளையம் வளையமாக வெட்டினேன். அந்தக் துணி உருண்டை மேல் ஒவ்வொரு வளையமாக இழுத்து இழுத்துப் போட்டேன். கை நகத்தின் அடி தோலெல்லாம் பிசிறு பிசிறாக உரிந்து புள்ளி புள்ளியாக இரத்தம் தெரிந்தாலும் விளையாட்டு ஆர்வத்தில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட திருப்பதி லட்டு அளவில் பெரியதாக வந்தது.

தற்போது பந்தும் ரெடி. நான் இடக்கையில் ஸ்பின் போடுவேன். அந்த டியூப் பால் 90° அளவுக்கு எதிர்பாராத விதத்தில் திரும்புகிறது. பேட்ஸ்மேனுக்குத் தலை சுற்றியது. எங்கெங்கோ திரும்பி ஸ்டம்ப்பில் பட்டுவிடும். சமையலறையில் வந்த எலி போல் பந்து எங்கே போகுமென்று பௌலருக்கே தெரியாது.

ஒருவழியாக தப்பித் தவறி பேட் பந்தில் பட்டால் மேலிருக்கும் ஒரு வளையம் அறுந்து பந்துடன் அதுவும் வரும். ஒரு வேகத்தில் பார்க்க அதுவும் பந்து போலவே இருக்கும். ஃபீல்டருக்கு எதை கேட்ச் பிடிக்கவேண்டும் என்று குழப்பம். அவுட் செய்வதில் ஏகப்பட்ட பஞ்சாயத்து.

மீண்டும் பழைய கிரிக்கெட் பந்தின் உறையை மைதானத்தில் தேடி எடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் மன்றாடினால் எங்கள் பந்து அதற்குள் கொள்ளாத அளவு பெரிதாக இருந்தது. பத்து பதினைந்து வளையங்களைக் கழட்டி அதை உள்ளே வைத்து தைத்து இனிமேல் ரப்பர் வளையம் கழன்று வராமல் செய்தேன்.

இப்போதய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இவைகளைக் கேட்பதற்கு முன்பே வாங்கித் தருகிறார்கள். ஆனால் விளையாட மைதானம்தான் எங்கேயும் காணோம்.

Story Time - வயலும் வாழ்வும்

 வயலும் வாழ்வும்

திரு. நாராயணமூர்த்தி

Image Source : Eluthu

அம்மா, அம்மா ,நானும் பழனி மாமாவுடன் வயலுக்குப் போய் அங்கெல்லாம் பார்த்து விட்டு ஜாக்ரதையாக வரேன்மா" ரொம்ப கெஞ்சினேன். அனுமதி கிடைத்தது. சந்தோஷமாக அவர் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து நானும் வயலுக்குப் போனேன்.‌ மிகவும் இனிமையான காட்சி. கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சைப் பசேல் என்று நெல் வயல்கள் தழைத்து காற்றில் பட்டு வெல்வெட் போல மெதுமெதுவாக தலையாட்டிக் கொண்டிருந்தன. அருகில் தெளிந்த நீருடன் வாய்க்கால் அனைவரின் வயல்களுக்கும் பாசனம் அமைவதற்காக வளைந்து வளைந்து சென்றது. ஆங்காங்கே வாய்க்கால் ஓரம் ஆலும் அரசும்  குடை விரித்துப் பெரு நிழல் தந்தன. மெதுவாக வீசும் காற்றில் படபடத்த பழுத்த இலைகள் செய்யும் ஓசை நல்ல சூழலைக் கொடுத்துக் கொண்டு இருந்தன.

"பழனி மாமா, எனக்கு சூசூ வருது. பாத்ரூம் எங்கேயிருக்கு"  பெருங்கூச்சல் கொடுத்து கத்தினேன்.

அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. "அங்கேயே போடா! உனக்காக வயலில் பாத்ரூமெல்லாம் கட்ட முடியாது"

கொஞ்ச நேரம் ஆயிற்று. எனக்கு சற்றே போர் அடித்தது. நான் அப்போதுதான் சைக்கிள் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தேன்.  ஓட்டத்தெரியும். ஆனால் தானாக ஏறவும் தெரியாது;  இறங்கவும் தெரியாது. சைக்கிள் ஆரம்பத்தில் தனியாக ஓட்டுவதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். 

"பழனி மாமா நான் கொஞ்சம் சைக்கிள் ஓட்டட்டுமா?"

"சரிடா,பாத்து கீழே விழாமல் ஓட்டு"

அவருக்கு அப்போது பின்விளைவுகள் தெரியவில்லை.

சைக்கிளை (என் அப்போதைய உயரத்திற்கு அந்த சைக்கிள் உயரம் மிக அதிகம்). ஒரு பாறை ஓரம் அதைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி அதன் மேல் ஏறி குரங்குப் பெடல் போட்டு சைக்கிளை ஓட்டத் தொடங்கி விட்டேன். நான் சைக்கிளை ஓட்ட ஓட்ட ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி வீடு வரை வந்து விட்டேன். வயலுக்கும் வீட்டுக்கும் இடையே ஐந்து மைல். (கிமீ அப்போது இல்லை)

வீடு வந்ததும் சைக்கிளை விட்டு இறங்கத் தெரியாமல் அக்ரஹாரத்தின் எட்டு வீதிகளையும் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு வழியாக என்னை விட இளைப்பான ஒரு பெரியவர் போய்க் கொண்டிருந்தார். அவர் மீது ஓரளவு வேகத்தைக் குறைத்து மோதி கீழே விழுந்தேன். அவரும் விழுந்தார். எனக்கு கால் முட்டியில் சற்றே சிராய்ப்பு. அவர் சமாளித்து எழுந்து அவருக்கு உரிய சக்தியானுச்சாரம் என்னைத் திட்டினார். எனக்கு ஒன்றும் காதில் விழவேயில்லை. சைக்கிளை விட்டு இறங்கியதே எனக்குப் பேரானந்தம்.

பாவம்; பழனி மாமா. வயலில் இறங்கி வேலை செய்வதால் அவருக்கு இரண்டு கால்களிலும் காலாணித் தொல்லை உண்டு. வயலில் நாள் முழுவதும் வேலை பார்த்துக் களைத்து வீட்டுக்கு வரும் நேரம் அவருடைய சைக்கிள் இல்லாமல் போனதில் அவருக்கு ஏகப்பட்ட கோபம். மேலும் நான் எங்கே விழுந்து கிடக்கிறேனோ என்ற பயம் வேறு. 

நான் ரொம்ப சமர்த்தாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள சைக்கிளை ஓரம் நிறுத்தி விட்டு,உள்ளே போய் பாடப்புத்தகம் எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அகால நேரத்தில் பையன் சொல்லாமலே படிக்கிறானென்றால் ஏதோ குறும்பு செய்திருப்பான் என்று அம்மாக்களுக்குத் தெரியாதா?

ஆனால் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு உக்கிரமாக "எங்கே அந்த மூர்த்தி" என்று கத்திகொண்டே பழனி மாமா உள்ளே வந்தார். இதற்கும் மேல் என்ன நடந்தது என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

Story Time - சித்திரகுள்ளனும் மர்மயோகியும் (பாகம் 1)

சித்திரகுள்ளனும் மர்மயோகியும் - (பாகம் 1)

திரு. கணேசன் ராமநாதன்


இந்த கதை சரித்திர கதையில்லை. இதை ஒரு நகைசுவை கதை என்றும் கூறமுடியாது. ஆனால் நகைசுவை இரண்டர கலந்த கதை. இது அறிவியல் கதை இல்லை. ஆனால் அறிவியல் சார்ந்த கதை.

" என்னை கூப்பிட்டீங்களாமே"

வாயில் இருந்த சிகரெட்டை எடுத்து அணைத்துவிட்டு தனது பார்வையை கீழிறக்கி அங்கு நின்றிருந்த அப்புவை வெறுப்புடன் பார்த்தான் பாஸ்கரன். ஆறடிக்கு மேல் உயரம். நல்ல தேக கட்டு. அமெரிக்காவில் பிறந்திருந்தால் அர்னால்ட் சுவாஷ்னேகருக்கு பதிலாக இவன் தான் ஹாலிவுட்டில் பிரபலமாயிருப்பான்.

" நேத்து மழைக்கு முளைச்ச காளான் நீ. அரை ஆழாக்கு உயரத்தில இருக்கிற உனக்கு காதல் ஒரு கேடு. சந்தியாகிட்ட போய் அவளை காதலிக்கறதா சொன்னியாமே. சந்தியா என்னோட ஆளு. உனக்கு என்ன தைரியம் இருந்தா அப்படி சொல்லியிருப்பே" என்று சொல்லிகொண்டே அப்புவை சட்டை காலரோடு தூக்கி வாயில் மீதியிருந்த சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டு அவனை கீழே தொப் என்று போட்டான்.

" அய்யோ அம்மா" என்று அலறிக் கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் நடுங்கி கொண்டு எழுந்தான் அப்பு. அப்பு மூணடி உயரத்தில் பாஸ்கரனின் சர்க்கஸ் கம்பெனியில் விதூஷகனாக வேலை பார்த்தான். முன்பொரு சமயம் பாஸ்கரன் அவனிடம் " குப்பை தொட்டில அனாதையா கிடந்த உன்னை எங்க அப்பா எடுத்து வளர்த்து இந்த சர்க்கஸ் கம்பெனில உனக்கு வாழ்க்கை தந்தார். அதை நினைப்பில வச்சுக்கிட்டு நடந்துக்க" என்று தனது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறான். அப்புவை சர்க்கஸ் பார்வையாளர்களுக்கு பிடிக்கும். அவன் செய்யும் சேட்டைகள் சிறுவர்களிடையே பெரும் சிரிப்பையும் கைதட்டலையும் வரவழைக்கும்.

பாஸ்கரன் சர்க்கஸில் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பான். சர்க்கஸின் ரிங் மாஸ்டரும் அவன் தான். மிருகங்களுடன் பழகி பழகி அவனும் ஒரு மிருகமாக நடந்து கொள்வான். சந்தியா சர்க்கஸில் சேர்ந்த பிறகு அவனிடம் சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. சந்தியா கேரள நாட்டு அழகி. அரிதாரம் பூசி ஜிகினா உடையில் அவள் பார் விளையாடுவதை அனைவரும் கண் கொட்டாமல் பார்ப்பார்கள்.

நான் ஏன் பிறந்தேன், எதற்காக வாழ்கிறேன் என்று விரக்தியாக வாழ்ந்து வந்தான் அப்பு. அபூர்வசகோதரர்கள் படத்தில் அவன் பெயரை கொண்டு அவனை மாதிரியே குள்ளனாக நடித்த கமல் காதல் தோல்வி அடைவதை பார்த்து குலுங்க குலுங்க அழுதிருக்கிறான் நம்ம அப்பு.
ஆனால், அப்புவை சந்தியாவின் அழகும் அவனிடம் அவள் காட்டிய அன்பும் காதல் என்ற மாய வலையில் வீழ்த்தியது.

" சந்தியா என்னோட ஆளு" என்று சொல்லி அவளிடம் தன் காதலை கூறியதை பாஸ்கரன் கண்டித்தது அவன் மனதை சுக்கு நூறாக்கியது.

" என்ன நான் சொன்னது காதில விழுந்ததா? சந்தியாவை மறந்துடு. உனக்கேத்த நண்டோ சிண்டோ வத்தலோ தொத்தலோ பாத்து காதலிச்சுக்கோ. இல்லைனா உன்னை உதைப்பேன். போ".

" சரிங்க அய்யா" னு சொல்லி தலையாட்டிவிட்டு அப்பு பாஸ்கரனின் கூடாரத்திலிருந்து வெளியே வந்து தனது கூடாரத்தை நோக்கி நடந்தான். அவன் மனம் வலித்தது. சந்தியாவின் சிரித்த முகம் கண்முன் வந்து அவனை வாட்டியது. வானொலியில் நேற்று அவன் கேட்ட பாடல் நினைவுக்கு வந்து அவன் சோகத்தை கூட்டியது. அவன் கேட்ட பாடல் இது தான்>

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய்
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதான் கண்ணே

அன்பே உயிரால் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உன்னை சேரும் நாளை தினமும் ஏங்கினேனே
நானிங்கு தனியாய் அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலே

நினைத்தாலே இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடம் எங்கும் நீ தான்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலே

தொடரும்..

First published in Muthamilmandram

Swara Sangamam @ Serene Rose

 Swara Sanagamam @ Serene Rose


It is a well known saying that music has no barriers.  It is a great leveler since it unites everyone.

In the current Covid situation, music helps relieve anxiety and provides relaxation.  Watching and listening to old songs and renditions being replayed also reminds us of those memories associated with it.  

Over the past few weeks, residents of Serene Rose have been enthusiastically participating in 'Swara Sangamam'.  Thanks to the initiative from volunteers like Ganesan Ramanathan & Ravikumar, Swara Sangamam has provided an avenue for the residents to share their musical talents with others in the community.  

Check out few glimpses from our talented residents.  








Cycle - A Small Story

 சைக்கிள்

திரு. நாராயணமூர்த்தி

ராலிஸ் சைக்கிள் அப்பொழுதெல்லாம் தரமான சைக்கிள் என்று பெயர் பெற்றது. ஐநூறு ரூபாய் சைக்கிளை பத்து மாதங்கள் உள்ள தவணையில் வாங்கிய நாட்கள். தெருவுக்குத் தெரு சைக்கிள் ரிப்பேர் கடை இருக்கும். சக்கரத்திற்குக் காற்றடிக்க ஐந்து பைசா. நாமே அடித்துக் கொண்டால் இலவசம். பங்க்சர் பார்க்க நாலணா. டயருக்குள் இருக்கும் ட்யூபைக் கழட்டி உப்புத்தாள் கொண்டு ஓட்டையைத் தேய்த்து ஒரு சொல்யூஷன் தடவி விட்டு விடுவார். நமக்கு பேப்பரை கோந்து போட்டு ஒட்டும் டெக்னிக்தான் தெரியும். கோந்து காய்ந்தால் பேப்பர் ஒட்டாது. ஆனால் இந்த சைக்கிள்காரருக்கு எல்லாம் தலைகீழ். அந்த சொல்யூஷன் காயவேண்டுமாம். அரை மணி தேசகாலம் ஆன பின் நாம் நம்பிக்கையை இழந்த நேரத்தில் பழைய டியூபில் ஒரு துண்டை அழகாக வட்டவடிவிலோ, அறுகோண வடிவிலோ கலை உணர்வுடன் வெட்டி அதையும் உப்புத்தாளில் தேய்த்து, அதற்கும் சொல்யூஷன் தடவி காயவிட்டு முன்பு காய்ந்த பசையின் மீது ஒட்டுவார். என்ன ஒரு மாயாஜாலம்! சும்மா பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும். காற்றடித்தால் ஒரு காற்றுக் குமிழ்கூட வராது. முதன் முதலில் நம் தர்க்கம் தோற்ற இடம் அது. 

வருடங்கள் செல்லச் செல்ல சைக்கிளின் மதிப்பு ஏறிக்கொண்டே போகும். "இது என் தாத்தாவின் சைக்கிள் என்று சொல்வதில் அத்தனை சந்தோஷம்". 

பொதுவில் நம்மை விட ஒரு அடி உயரத்தில் இருக்கும் சைக்கிளில்தான் நாம் அதைப் பழகியிருப்போம். கீழே விழுந்து முட்டிகளைப் பேத்துக்கொள்ளாத பயல்களே கிடையாது. அத்தனையும் வீரத்தழும்புகள். விழுந்தவுடன் நாம் பட்டுக்கொண்ட காயத்தைப் பார்ப்பதை விட சைக்கிளுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்றுதான் பார்ப்போம். பெரிதாக ஏதேனும் ஆகியிருந்தால் மறுநாள் சைக்கிள் கிடைக்காது என்ற பயம். 

ஒரு வாரம் சென்ற பின் ஓரளவுக்குத் தனியே ஓட்ட வந்துவிடும். ஏற,இறங்க, பிரேக் பிடிக்க இதெல்லாம் அட்வான்ஸ்டு லெவல். அதற்கும் மேலே இரு கைகளையும் ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து விட்டு பேலன்ஸ் செய்து திரும்புதல் PHD லெவல்.

ஸ்பிரிங் பெல்,பார்கவர், ராக்கெட் சீட்,கைப்பிடிகளுக்குக் குஞ்சலம்,டைனமோவுடன் லைட்,  "அன்பே வா சரோஜா தேவி" கணக்காக அதற்கு மஞ்சள் பஞ்சுத்துணியில் சுற்றி வைப்பது, இதெல்லாம் இருந்தால் பென்ஸ் கார் வைத்திருக்கும் முதலாளி மனோபாவம் வந்துவிடும்.

வேலை கிடைத்தவுடன் முதன் முதலில் வாங்கப்படும் பொருள் அனேகமாக எல்லாருக்கும் சைக்கிளாகத்தான் இருக்கும். பிறகுதான் நல்ல பேண்ட், சட்டைகள், ரேடியோ இத்யாதிகள்.

இப்போதெல்லாம் பிள்ளைகள் கீழே விழாமலே கற்றுக் கொள்ள ஒட்டுச் சக்கரங்கள் வைத்த சிறுவர் சைக்கிள்கள் வந்துவிட்டன. ஆண்பால் பெண்பால் வித்தியாசம் இல்லாமல் எந்த சைக்கிளுக்கும் பார் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த சைக்கிளையும் வாங்கலாம். இரட்டை லேடிபேர்டு சைக்கிளை எங்கேயும் காணோம்.

டியூப் பங்க்சர் ஆனாலோ,காற்று குறைந்தாலோ அதை சரி செய்ய பட்டணத்தில் ஆட்கள் இல்லை. வாங்கி ஒரே மாதத்தில் ஒட்டடை அடைந்து அனைவர் வீட்டிலும் இருக்கும் வேக்குவம்க்ளீனர் போல ஒரு மூலையில் தேமே என்று நிற்கும். கேட்பாரில்லை. 

சைக்கிளைப் போல எழுச்சியும் வீழ்ச்சியும் மன்னர்கள் கூட அடைந்திருக்க மாட்டார்கள்.

Serene Rose : Women's Day Celebrations - 2021

 மாதராய் பிறக்க மா தவம் செய்திடல் வேண்டும் 

- மகாகவி பாரதி

Every year on 8th March, Women's Day is celebrated at Serene Rose with enthusiasm.  This year was no different.  It's the time of the year when the resident women organize many events to celebrate womanhood.   

All the women - including the support staff and others participate in this celebration which is a mark of inclusivity of the Serene Rose residents.  Gifts were also distributed to the support staff in recognition of their contribution to the community.

Enjoy a few moments from the photos and video below.  Don't forget to share your experience in the comments section below.







If you are curious to know the history behind the International Women's Day Celebrations, head over to the IWD's website.

And, for some interesting facts on the Women's Day, this link has more details.  

Kaarthigai Deepam 🪔 Celebrations

நம் கோயில் கார்த்திகை தீபம் விழாவில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் வந்திருக்கும் நிலாவொளியில் செரீன் ரோஸ்.


Selva Vinyagar is shining with his divine glory and blessing the Serene Rose residents.





Significance & History of Kaarthigai Deepam

Some of us do not know that this is one of the oldest festivals celebrated in South India, maybe even before people start celebrating Deepavali and Navarathri. In addition, unlike many other Hindu festivals, Karthigai is basically a south Indian festival and is virtually unknown in most other parts of the country. One of the first references to the festival is the Ahananuru, a book of poems dating from the age of Sangam (200 BC to 300 AD). The Ahananuru clearly states that Karthigai is celebrated on the full moon day of the Tamar month of Karthigai (November December). It was one of the most important festivals (peruvizha) of the ancient Tamils. Avaiyyar, the famous poet of the time, refers to the festival in his songs.  Read more ... 

Contact Us

Address

No 323/1B, Opp Kendriya Vidyalaya, Near Sulur Airforce Station, Kangeyampalayam, Trichy Road, Sulur, Tamil Nadu 641 401, India

Phone

+91 422 428 5555